அந்த வகையில் தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, திருப்பனந்தாள் ஒன்றியத்திற்குட்பட்ட கோட்டூர் ஊராட்சியில் ஊராட்சி மன்றத்தலைவர் சொந்த ஏற்பாட்டில் ஆடுதுறை ரோட்டரி சங்கத்துடன் இணைந்து கிராமத்தில் உள்ள 400க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு பிறந்த வீட்டு வரிசையாக சில்வர் தாம்பாளம், பச்சரிசி, வெள்ளம், நெய், முந்திரி, திராட்சை, இரண்டு கரும்புகள், வாழைப்பழம் உள்ளிட்டவைகளுடன் சீர்வரிசையை வழங்கும் விழா அதிமுக தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.கே. பாரதி மோகன் தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் திருப்பனந்தாள் ஒன்றிய துணைப் பெருந்தலைவர் கோ.க. அண்ணாதுரை, ரோட்டரி சங்க நிர்வாகிகள் டாக்டர் அருள்ராஜ் தலைவர் பக்கிரிசாமி ஆடுதுறை ரோட்டரி சங்க நிர்வாகிகள் தலைவர் Dr.மணிவண்ணன் செயலாளரை இஸ்மத் பாட்சா பொருளாளர் மோகனசுந்தரம் நிர்வாக இயக்குனர் விஜயகுமார் சமுதாய பணி இயக்குனர் சண்முகம் சங்க பயிற்றுனர் ஹாஜி முகமது-ஆகியோர் முன்னிலையில், ஊராட்சி மன்றத்தலைவர் உமா சிங்காரவேலு ஒவ்வொறு வீட்டிற்கும் நேரில் சென்று வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் ஆண்டுக்கு இரண்டு முறை ஊராட்சி மன்றம் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் குளத்தில் வளர்க்கப்படும் மீன் இறைச்சிகளை அசைவ பிரியர்களுக்கும் சத்தான செவ்வாழை பழத்தை சைவ பிரியர்களுக்கும் வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment