நிகழ்ச்சிக்கு திருவையாறு அரசர் கல்லூரி முதல்வர் (பணி ஓய்வு) முனைவர் சண்முக செல்வகணபதி,தமிழ்நாடு யாதவ் மகா சபை மண்டல தலைவர் டி கே ஜி கண்ணன், பாகவத மேளா நாட்டிய வித்யா சங்கத்தின் கலைமாமணி மெலட்டூர் ஆர். மகாலிங்கம், மலேசியா பரத பன்முக விற்பன்னர் தேவ சகாயம் சுப்பையா ஆகியோர் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்து பேசினார்.
பக்கவாத்திய வித்வான்கள் வெங்கடேஷ் செந்தில் குமார் விக்னேஷ் செந்தில்குமார், மலேசியா பரதநாட்டிய குரு ஸ்ரீ தேவி சந்திரசேகர் குழுவினர் முன்னிலையில் நாட்டியம் ஆடினர், தொடர்ந்து பாகவத மேளா நாட்டிய வித்யா சங்கத்தினர் பெண் வேடமணிந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர் தொடர்ந்து குரு பா.ஹேரம்ப நாதன் அவர்களின் நினைவு விருது பெறும் மெலட்டூர் பரதம் எஸ் நாகராஜன்,மலேசியா திருமதி ஸ்ரீதேவி சந்திரசேகரன் ஆகியோருக்கு விருது கௌரவிக்கப்பட்டது. இந்த நாட்டிய விழாவில் பங்கேற்ற அனைத்து கலைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில் காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் ஏகேஆர்.ரவிச்சந்தர் கலந்து கொண்டார்.
நிறைவில் திருவையாறு காவிரிக்கலை அறன் அறக்கட்டளை கலைச்சுடர்மணி குரு வஜ்ரவேல் கலியமூர்த்தி நன்றி கூறினார்.
.jpg)
No comments:
Post a Comment