தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரம் பேரூராட்சியில் புகையில்லா பொங்கல் 2024 கொண்டாடுவதை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் அனைத்து வார்டுகளிலும் ஆட்டோ விளம்பரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் குப்பைகள் சேகரம் செய்யும் மையம் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோவில் வளாகத்தில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு குப்பைகள் தரம் பிரித்தல் மற்றும் நெகிழிகள் பயன்படுத்தாத வண்ணம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருநாகேஸ்வரம் பேரூராட்சிக்கு சொந்தமான வளம் மீட்பு பூங்காவில் பள்ளி மாணவ மாணவியரைக் கொண்டு திடக்கழிவு மேலாண்மை குறித்து விளக்கமளிக்கப்பட்டது. பொதுமக்கள் அதிகம் கூடும் கடைவீதி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை, புகையில்லா பொங்கல், நெகிழிகள் பயன்பாடு தவிர்த்தல் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பேரூராட்சி மன்றத்தலைவர் ஜோதி தாமரைச்செல்வன், துணைத்தலைவர் உதயாஉப்பிலி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் செயல் அலுவலர் பங்கயற்செல்வி மற்றும் அலுவலகப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment