தஞ்சாவூர் வல்லம் சாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக செயற்பொறியாளர் அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய கண்காணிப்பு பொறியாளர் திருமதி நளினி மின்சார வாரிய செயற்பொறியாளர் எஸ் என் கலைவேந்தன். ஆகியோர் தலைமையில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் அனைத்து துணை மின் நிலைய பொறியாளர்கள் உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர் காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் ஏ கே ஆர் ரவிச்சந்தர் திருவையாறு ஒன்றிய தலைவர் ஆர் அறிவழகன் ,பிரேமன் நாடார் கிளிண்டன் ஆகியோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
மனு கொடுத்து வெளியே வந்த பிறகு காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் ஏ கே ஆர் ரவிச்சந்தர் நிருபர்களிடம் பேசியதாவது;- மேட்டூர் அணை மூடிய நிலையில் சம்பா தாளடி சாகுபடி செய்துள்ள தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் நலன் கருதி மும்முனை மின்சாரம் 12 மணி நேரம் தொடர்ந்து பகல் நேரத்தில் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
கள்ள பெரம்பூர், பூதலூர் திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு ஆகிய துணை மின நிலைய பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது அதை உடனடியாக சரி செய்து தடையில்லா மின்சாரம் வழங்குமாறு வேண்டுகிறேன் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல துணை மின் நிலையங்களில் மின் பொறியாளர்கள் பணியிடம் காலியாக உள்ளது இரண்டு துணை மின்நிலைகளில் பராமரித்து மின்விநியோகம் செய்வது சிரமம் ஏற்படுகிறது மின் தடை தொடர்பாக புகார்களை உடனுக்குடன் நிறைவேற்ற முடியவில்லை எனவே காலியாக உள்ள துணை மின் நிலையத்தில் மின் பொறியாளர்களை நியமிக்க அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு பணிவுடன் வேண்டுகிறேன் தஞ்சை மாவட்டத்தில் சம்பா சாகுபடி நெற்பயிர்கள் பல இடங்களில் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
கதிர் வரும் நிலையில் மேட்டூர் அணையை பாசனத்திற்கு பிப்ரவரி 20ஆம் தேதி வரை பிறக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு செவி சாய்க்கவில்லை எனவே முழுக்க முழுக்க சம்பா நெல் சாகுபடியில் மின் மோட்டார் பாசனத்தையே நம்பி இருக்கிறோம் எனவே தடையின்றி மின்சாரம் வழங்க வலியுறுத்துகிறேன் எனக் கூறினார்.
No comments:
Post a Comment