தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள மருங்கப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனியப்பன் (49). இவரது மனைவி சத்யா. அவர்களுக்கு சபரி ( 26) என்ற மாற்றுத்திறனாளி மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். பழனியப்பன் ஆந்திராவில் உள்ள ஒரு நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 30 ஆம் தேதி காலை ஆந்திர மாநிலம் நெல்லூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென லாரியிலிருந்து கீழே விழுந்துள்ளார். அப்போது தலையில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
பிறகு அவரது உடல் நேற்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன.இதனை அறிந்த தஞ்சை மாவட்ட தாய்நாடு அனைத்து ஓட்டுநர் தொழிற்சங்கத்தின் தலைவர் செந்தில்குமார் .செயலாளர் பழனிச்சாமி .பொருளாளர் அன்பழகன் மற்றும் ஓட்டுநர்கள் அனைவரும் விபத்தில் பலியானபழனியப்பன் வீட்டிற்கு சென்று பழனியப்பனின்மனைவி சத்யாவை வீட்டில் சந்தித்து நிதி உதவி மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினர்.
- பேராவூரணி செய்தியாளர் த.நீலகண்டன்
No comments:
Post a Comment