தஞ்சையில். கலைஞர் நூற்றாண்டு விழா: 100 ஓவியம் புத்தக வடிவில். - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday 21 January 2024

தஞ்சையில். கலைஞர் நூற்றாண்டு விழா: 100 ஓவியம் புத்தக வடிவில்.


மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி தொடங்கியது. இதனை முன்னிட்டு 2024 ஆம் ஆண்டு பல திட்டங்கள் தமிழ்நாடு அரசால் தொடங்கி வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கலைஞரின் பலவேறு திட்டங்களில் 100 திட்டங்களை ஓவியமாக தீட்டி புத்தகமாக தொகுத்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் கரங்களில், தலைவர் முத்தமிழறிஞர் அவர்களின் நினைவாக கலைஞரின் கலைஞர் என்ற ஓவிய புத்தகத்தில் மாணவர்களின் ஓவிய இடம் பெறுதல் நோக்கமாக மாபெரும்  ஓவியப்போட்டித்தேர்வு நடைபெற்றது.

தஞ்சாவூர் கலைஞரின் கலைப் பயணமும் அவரது திட்டங்களை நினைவு கூறும் வகையில் 6 ஆம் வகுப்பு  முதல் இளங்கலை வகுப்பு வரையிலான  பயிலும் மாணவ -மாணவிகளுக்கான ஓவிய போட்டி பாரத் கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது. .


போட்டிக்கு மாநகர மேயர் சண். ,ராமநாதன்,துணை மேயர் டாக்டர் அஞ்சகம் பூபதி ஆகியோர் வாழ்த்துக்களுடன், தமிழ்ப் பல்கலைக் கழகம், நாட்டுப்புறவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் சீமான் இளையராஜா தலைமையில், நவின் ஓவியர் வி இராஜகோபால், கலை ஆவண புகைப்படக் கலைஞர்  ஓவியர் ஆர். மணிவண்ணன், மதுரை சுபலட்சுமி இலக்குமிபதி அறிவியல் கல்லூரி, உதவி பேராசிரியர் ஓவியர் ஆர் அருள் யோகராஜ், சென்னை சவிதா பல்கலைக்கழகம், உதவி பேராசிரியர், சிற்பி, ஓவியர் பி. தனசீலன், சினிமா உதவி இயக்குனர், கலை இளமணி, ஓவியர் ஏ.நவீன் ஆகியோர் நடுவராக கலந்து கொண்டனர்.


இந்த போட்டியில் 6 ஆம் வகுப்பு முதல் இளங்கலை வகுப்பு வரை பயிலும் பல்வேறு பள்ளி,கல்லூரி சேர்ந்த  மாணவ -மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். கலைஞர் ஓவியங்கள்,திட்டங்கள்  உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் ஓவியங்கள் வரைந்து தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் பங்கு பெற்ற அனைத்து மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முடிவில் சிறப்பாக ஓவியம் வரைந்த  மாணவ மாணவிகள் 100 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு  புத்தக வடிவில் ஓவியம் வரைவதற்கான மூன்று நாள் பயிற்சி அளிக்கப்படும்.


நிகழ்வை மேற்பார்வையாளர் தஞ்சை  கலைவளர்மணிஓவிய க. ஈஸ்வரன், ஒருங்கிணைப்பாளர் எக்ஸ்டீம் எஜுகேஷன் நிறுவனர் பிரேமலதா லட்சுமணன், மக்கள் தொடர்பு அலுவலரும், எழுத்தாளருமான பாலமுருகன் ஆகியோர் போட்டியை நடத்தி மேற்கொண்டு வரும் பிப்ரவரி 24 - ம் தேதி  கலைஞரின் கலைப்பயணமும் அவரது திட்டங்களும் பற்றியும் ஓவியமாக  கலைஞரின் கலைஞர் என்ற புத்தகம் வெளியிட முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad