தஞ்சாவூர் சரபோஜி கல்லூரி நூலகம் மற்றும் அறிவு சார் மையத்திற்கு ரூபாய் 4000 மதிப்புள்ள புத்தகங்கள் நன்கொடை. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 20 January 2024

தஞ்சாவூர் சரபோஜி கல்லூரி நூலகம் மற்றும் அறிவு சார் மையத்திற்கு ரூபாய் 4000 மதிப்புள்ள புத்தகங்கள் நன்கொடை.


தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி வளாகத்தில் உள்ள நூலகம் மற்றும் அறிவு சார்ந்த மையத்திற்கு  சமூக ஆர்வலர்கள் நூல்களை நன்கொடையாக வழங்கினா். தஞ்சாவூர் மன்னர் சரபோஜி கல்லூரி வளாகத்தில் உள்ள நூலகம் மற்றும் அறிவு சார்ந்த மையம் புதிதாக நூலகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த நூலகம் கல்லூரியின் மாணவ மாணவிகள்,பொதுமக்கள் பயன் பெரும் வகையில் அமைந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்  அறிவுறுத்தல் படியும் தஞ்சாவூர் காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவரும், சோழர் கலை மன்ற தலைவருமான ஏ கே ஆர் ரவிச்சந்தர்  வழிகாட்டுதலில் தஞ்சாவூர் பாரத சிற்பி அறக்கட்டளை நிறுவனர் சமூக ஆர்வலர் பாரத சிற்பி ஆர் ப்ரனேஷ் இன்ஃபின்ட் ராஜ் தஞ்சாவூர் மன்னர் சரபோஜி கல்லூரி வளாகத்தில் உள்ள நூலகம் மற்றும் அறிவு சார் மையத்திற்கு ரூபாய் 4000 மதிப்புள்ள 31 க்கும் மேற்பட்ட பயனுள்ள புத்தகங்களை நன்கொடையாக வழங்கினார்கள் அந்த புத்தகங்களை நூலக பொறுப்பாளர் த மகேஸ்வரராவ் பெற்றுக் கொண்டார்.


மேற்படி நூலகம் அறிவுசார் மையத்திற்கு மேலும் பல புத்தகங்களை வழங்குவதாக ப்ரனேஷ் இன்பென்ட்ராஜ் , ஏ கே ஆர் ரவிச்சந்தர் ஆகியோர் தெரிவித்தார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad