இதில் 'சென்னை, திருவள்ளுவர் செங்கல்பட்டு ,ஈரோடு உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 250 க்கு மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர். நாராயண நிதி, நிறுவனர் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கீர்த்தி வாசன் துவக்கி வைத்து 37 ஆவது தேசியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், பங்கேற்றவர்களுக்கும், நினைவு பரிசை வழங்கி கௌரவப்படுத்தினார்.
சிறப்பு அழைப்பாளராக சோழராஜன், வழக்கறிஞர் திலீப் குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தொடர்ந்து பாஜக தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சாக்கோட்டை சதீஷ்குமார், மாநகரத் தலைவர். மற்றும் தஞ்சை மாவட்ட உரைவால் சங்கம், தலைவருமான பொன்ராஜ் தேவர், பசுமை சித்தர் அருள் தீர்த்தகிரி மடாதிபதி, ஈட்டி பசும்பொன் பாண்டியன் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.
இப்போட்டியில் ஈரோடு மாவட்டம் 70 தங்கமும் பதக்கமும், 4 வெள்ளிப் பதக்கமும் பெற்று முதலிடத்தை பிடித்தது,தஞ்சாவூர் மாவட்டம் 53 தங்கம் 33 வெள்ளி, 5 வெண்கல பதக்கங்களைப் பெற்று இரண்டாம் இடம், பிடித்தது, திருவள்ளூர் மாவட்டம் 3 தங்கம் 7 வெள்ளி 2 வெண்கலமும் மூன்றாம் இடம் பிடித்தது, செங்கல்பட்டு மாவட்டம் 4 வெள்ளி நான்காம் இடத்தையும் பிடித்தது.
சர்வதேச நடுவர் லயன் கொய்சி செந்தில்குமார் கூறுகையில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவ மாணவியர் அனைவரும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற உள்ள தேசிய உரைவால் சண்டை போட்டிக்கு செல்ல இருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என கூறினார். சிறப்பு அழைப்பாளராக சோழராஜன், வழக்கறிஞர் திலீப் குமார், நடுவர்களாக விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சையது முகமது பிலால் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த குமணன் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த குணசேகரன் சார்லி அருட்செல்வி ஆனந்த் தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்த நடுவர்களான டி அபிஷேக் எஸ் ஜெயஸ்ரீ ஐ குணாளன் பிரபு சாரதி கலைவாணி ரஹினி, தமிழ்நாடு உரைவால் சங்கம், தலைவர் எஸ் கார்த்திகேயன், அட்வகேட் திலீப் குமார் அவர்கள், ரவிக்குமார் அவர்கள், சபரி தேவர், தமிழரசன் தமிழ் கன்சல்டிங் மகார், அவர்கள் பழனியப்பன், பா கார்த்தி, ராதாகிருஷ்ணன், ரவிக்குமார் சபரி தேவர், தமிழரசன் பழனியப்பன், பா கார்த்தி, ராதாகிருஷ்ணன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அனைத்து ஏற்பாடுகளை தேசிய நடுவர்களான டி, அபிஷேக், ஆர்.ராஜலட்சுமி, எஸ் ஜெயஸ்ரீ ஆகியோர் இணைந்து ஆணைக்கிணங்க செய்திருந்தனர்.
No comments:
Post a Comment