ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பெரும்பாலான சிவாலயங்களில் நடராஜபெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து வருகிறது அந்த வகையில் பஞ்சக்கா ஸ்தலங்களில் ஒன்றானதாகவும் வடுகபைரவர் சிறப்பு ஸ்தலமாகவும் இருந்து விளங்கும் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருக்கோடிக்காவல் திரிபுரசுந்தரி அம்பிகை சமேத திருக்கோடீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் உள்ள சிவகாமி அம்பாள் உடனுறை நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களும் தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரத்தில் ருத்ராட்ச மாலை உடன் சிவகாமி அம்பிகை உடனாகிய நடராஜ பெருமானுக்கு சிவாச்சாரியா பெருமக்கள் வேத மந்திரங்கள் ஓதிட நாதஸ்வர மேள தாளங்களுடன் ஓதுவா மூர்த்திகளின் திருமந்திர இசையுடன் சிறப்பு பூஜைகள் நடந்தது தொடர்ந்து சுவாமி அம்பாள் திருவீதி உலா காட்சியும் நடந்தது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு பஞ்சக்கா ஸ்தலங்களில் ஒன்றான திருக்கோடிக்காவல் திருக்கோடீஸ்வரர் கோயிலில் நடராஜபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் நடந்தது.
No comments:
Post a Comment