காவிரி டெல்டா விவசாயகள் சங்கம் தலைவர் ஏ. கே ஆர் ரவிச்சந்தர் பேசியதாவது, பொங்கல் தொகுப்பில் கரும்பு, தேங்காய், வெல்லம் மற்றும் ரூ.3000/- வழங்க வலியுறுத்துகிறேன். ஆண்டுதோறும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் முந்தைய அதிமுக அரசு செங்கரும்பு வழங்கிய நிலையில் தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு கரும்பை தவிர்த்து வேட்டி, சேலை ரூ.1000/- பச்சரிசி, ஜீனி வழங்க அரசாணை வெளியிட்டது.
இதனால் ஆத்திரமடைந்த கரும்பு விவசாயிகள் தலைமை செயலகத்தை முற்றுகை முற்றுகையிட முயன்று கைதானார்கள். அதன் பிறகு முதல்வர் விவசாயிகளிடம் கரும்மை கொள்முதல் செய்யவும் ஒரு கரும்பின் விலை 5.33/- என அறிவித்தார். ஆனால் அரசு அறிவித்த தொகை விவசாயிகளுக்கு முழுமையாக கிடைக்கவில்லை. அதிகாரிகள், இடைத்தரகர்கள் கூட்டணி வைத்து வெட்டுக்கூலி மற்றும் வாடகை செலவு என பிடித்துக் கொண்டு விவசாயிகளுக்கு கரும்பு ஒன்றுக்கு ரூ.15/- மட்டுமே கிடைத்தது. தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி, கண்டமங்கலம், வளப்பக்குடி கிராமங்களில் அதிக அளவில் செங்கரும்பு சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் பொங்கல்பரிசு தொகுப்பு திட்டம் பற்றி இதுவரை அரசு எந்த அறிவிப்பு வெளியிடவில்லை.
இது கரும்பு விவசாயிகளிடம் கலக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. தற்போது புயல், மழை, வெள்ள பாதிப்புகளால் பல மாவட்டங்களில் பொதுமக்கள் இன்னல்படும் வேளையில் மக்கள் நலன் கருதியும், விவசாயிகள் வாழ்வாதாரம் கருதியும் பொங்கல் தொகுப்பில் இரண்டு கரும்பு. 5 தேங்காய், ஒரு கிலோ வெல்லம், ரொக்கம் ரூ.3000/- வழங்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட வேண்டுகிறோம். பொங்கல் தொகுப்பு திட்டத்தில் வழங்கப்படும் பொருட்களை நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் தமிழ்நாடு அரசு விவசாயிகளிடம் இடைதரகர் இன்றி கொள்முதல் செய்து வழங்க வேண்டுகிறேன்.
மேட்டூர் அணை மூடிய நிலையில் ஒவ்வொரு கிராமத்திலும் சராசரியாக பயிர் சாகுபடி செய்யும் பரப்பளவு 75%-க்கு மேல் சம்பா சாகுபடி செய்ய முடியாத கிராமத்தில் பிரீமியர் செலுத்திய விவசாயிகளுக்கு ஒரு ஏக்கர் ரூ.9025/- காப்பீட்டு நிறுவனம் மூலம் இழப்பீடு வழங்கப்படும் என்ற அறிவிப்பை நம்பி தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி செய்துள்ள பல கிராமங்களில் விவசாயிகள் காப்பீடு பிரிமியம் செலுத்தியுள்ளோம். இந்நிலையில் வேளாண்துறை அதிகாரிகளும், காப்பீட்டு நிறுவன ஊழியர்களும் உடனடியாக ஆய்வு செய்து காப்பீடு இழப்பீடு தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டுகிறேன் எனவும் தஞ்சை மாவட்டத்தில் எந்தெந்த வருவாய் கிராமங்களில் காப்பீடு இழப்பீடு வழங்கப்படும் என்ற பட்டியலை செய்தித்தாள் மூலம் மாவட்ட நிர்வாகம் அறிவிக்க வேண்டுகிறேன்.
மேலும் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டால் மேற்படி காப்பீட்டு இழப்பீடு வழங்குவதற்கு தடை ஏற்பட வாய்ப்புள்ளது எனவே தேர்தல் அறிவிப்பதற்கு முன் இழப்பீடு வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் கூறினார்.
No comments:
Post a Comment