மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், சொந்த தொழில் கூடங்களில் அமைக்கும் சோலார் மின் இணைப்பு கட்டணத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து திருவிடைமருதூர் அருகே திருபுவனத்தில் சிறு மற்றும் குறுந்தொழில் சங்கத்தினர் இன்று மனித சங்கிலி போராட்டம்.
மின் கட்டண உயர்வை முழுமையாக திரும்ப பெற வேண்டும், பீக் ஹவர் கட்டணத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும், சொந்த தொழில் கூடங்களில் அமைக்கும் சோலார் மின் இணைப்பு கட்டணத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சிறு மற்றும் குறு தொழில்கூடத்திற்கு மின் கட்டண உயர்வு கூடாது என்பதை வலியுறுத்தி இன்று சிறு மற்றும் குறுந்தொழில் சங்கத்தினர் கும்பகோணம் அருகே திருபுவனம் சிட்கோ அலுவலகம் முன் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் ஏராளமான சிறு மற்றும் குறுந்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment