தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே ஆடுதுறை ஸ்ரீஆபத்ஸகாயேஸ்வரர் கோயிலில் திருவாதிரையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அபிஷேகம் நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே, ஆடுதுறை ஸ்ரீபவளக்கொடி அம்பிகா சமேத ஸ்ரீஆபத்ஸகாயேஸ்வரர் கோயிலில் திருவாதிரையை முன்னிட்டு ஸ்ரீநடராஜ பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், உள்ளிட்டவைகளுடன் சிறப்பு அபிஷேகங்களும் தொடர்ந்து சிறப்பு மலர் மாலைகள், ருத்ராட்ச மாலைகளுடன் பட்டாடை அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment