ஆருத்ரா தரிசன பெருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பிரசித்திபெற்ற சிவாலயங்களில் நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து வருகிறது அந்த வகையில் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருள்மிகு பிரகத்சுந்தர குஜாம்பிகை, மூகாம்பிகை சமேத ஶ்ரீ மகாலிங்க சுவாமி திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனம் பெருவிழா வெகு விமர்சையாக நடந்தது.
திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமானதாகவும், பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் தலமாகவும், மத்தியார்ஜூனமாக போற்றப்படும் இக்கோயிலில் ஆருத்ரா தரிசன பெருவிழாவை முன்னிட்டு கோயிலில் உள்ள சிவகாமசுந்தரி அம்பிகை உடனாய நடராஜ பெருமானுக்கு பால் தயிர் சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்களும் தொடர்ந்து கோயிலில் உள்ள ஆடல்வல்லான் மண்டபத்தில் நடராஜ பெருமான் வெண்பட்டுடுத்தி ருத்ராட்ச மாலைகளுடன் எழுந்தருள ஓதுவா மூர்த்திகளின் தேவார திருவாசக பதிகங்களுடன், சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்களுடன் மகா தீபாராதனையும் நடந்தது.
தொடர்ந்து நாதஸ்வர மேளதாளத்துடன் வின்னதிர இடைமருதா மகாலிங்கா எனும் கோஷங்களுடன் அலங்கரிக்கப்பட்ட நடராஜ பெருமானை பத்துக்கும் மேற்ப்பட்ட கிராம மக்கள் தங்களது தோலில் சுமந்து ஆனந்தமாய் ஆடி மனமுருகி வேண்டி வழிபட்டனர். தொடர்ந்து கோயிலில் உள்ள நான்கு வீதிகள் வழியாக திருவிதியுலாக்காட்சி நடந்தது.
No comments:
Post a Comment