தஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் உள்ள இந்தியன் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் மாபெரும் அறிவு சார் கண்காட்சி நடந்தது. இந்த கண்காட்சியில் அறிவியல் விவசாயம் உலகம் தமிழின் பெருமை நூலை படி விளையாட்டு திருபுவனத்தின் பெருமை பட்டுத்தறியின் சிறப்பு விண்வெளியில் இந்தியாவின் சாதனை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் ஆசிரியர்களின் வழிகாட்டுதலோடு மாணவர்கள் உருவாக்கிய பல்வேறு படைப்புகள் சிறப்பு அரங்கங்களில் இடம்பெற்றிருந்தன.
இதில் குறிப்பாக உலகமே உயர்ந்த இந்தியாவின் பெருமைக்குரிய நிகழ்வான நிலவின் தென் துருவத்தில் சந்திராயன் இரண்டு விண்கலத்தை செலுத்திய நிகழ்வை பள்ளி மாணவர்களை கொண்டு பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சிறப்பு நிகழ்வு நடந்தது.
மேலும் திருபுவனம் பகுதியில் சிறப்பு வரைகலை காட்சியும் தமிழர்களின் பண்டிகைகளான பொங்கல் மற்றும் கோயில் திருவிழா உள்ளிட்ட வரைகலை காட்சிகளும் திருபுவனத்தின் பெருமையை இன்று வரை நிலைநிறுத்தி இருக்கக்கூடிய பட்டுச்சேலை உற்பத்தியை பெருமைப்படுத்தும் விதத்தில் பல்வேறு பட்டு சேலைகள் மற்றும் அதன் பெருமைகள் குறித்து பள்ளியின் பெற்றோர்கள் தனி அரங்கம் அமைத்து விளக்கம் அளித்தனர்.
விழாவினை மாவட்ட கல்வி அலுவலர் தனியார் பள்ளிகள் துவக்கிவைத்தார். தமிழ்நாடு மெட்ரிக்குலேசன் மற்றும் நர்சரி பிரைமரி பள்ளிகள் சங்க மாவட்ட தலைவர் தில்லைகரசன். இந்திய பண்பாட்டு அமைப்பின் நிர்வாகி சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை பள்ளிதாளாளர் புவனேஸ்வரி வழிகாட்டுதலோடு தலைமையாசிரியை பிரபா உள்ளிட்ட ஆசிரியைகள் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment