தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் 1999 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட கடந்த 23 ஆண்டுகளாக பெற்று வந்த கிராம உதவியாளர்களின் கருணை அடிப்படையில் ஆன வாரிசுக்கு வேலை கடந்த மார்ச் எட்டாம் தேதி முதல் நிறுத்தப்பட்டது அதனை திரும்ப வழங்க வேண்டியும் அரசு ஊழியர் பட்டியலில் டி பிரிவை இணைக்க வேண்டியும் மற்றும் கிராம உதவியாளர்களின் 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் தமிழக முழுவதும் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது அந்த வகையில் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த காத்திருப்பு போராட்டத்திற்கு வட்ட தலைவர் பிரசன்ன வெங்கடேசன் தலைமை வகித்தார்.
வட்டச் செயலாளர் காளிதாஸ் முன்னிலை வகித்தார் மாநில செயற்குழு உறுப்பினர் கேசவன் ஓய்வு பெற்ற மாநில செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். போராட்டம் குறித்து மாநில தணிக்கையாளர் ராஜேஷ் கண்ணன் விளக்க உரையாற்றினார் வட்ட பொருளாளர் மாலதி நன்றி கூறினார்.
தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் நடந்த காத்திருப்பு போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்

No comments:
Post a Comment