ஆடுதுறையில் விவேகானந்தர் விளையாட்டு திருவிழாவாக நடைபெற உள்ள மாநில அளவிலான இறகு பந்து போட்டி அழைப்பிதழை ராமகிருஷ்ண மடத்திலன் அகில உலகத் துணைத் தலைவர் கவுதமானந்த மகராஜ் வெளியிட்டு ஆசி வழங்கினார். - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday 26 December 2023

ஆடுதுறையில் விவேகானந்தர் விளையாட்டு திருவிழாவாக நடைபெற உள்ள மாநில அளவிலான இறகு பந்து போட்டி அழைப்பிதழை ராமகிருஷ்ண மடத்திலன் அகில உலகத் துணைத் தலைவர் கவுதமானந்த மகராஜ் வெளியிட்டு ஆசி வழங்கினார்.


ஆடுதுறையில் விவேகானந்தர் விளையாட்டு திருவிழாவாக நடைபெற உள்ள மாநில அளவிலான இறகு பந்து போட்டி அழைப்பிதழை ராமகிருஷ்ண மடத்திலன் அகில உலகத் துணைத் தலைவர் கவுதமானந்த மகராஜ் வெளியிட்டு ஆசி வழங்கினார். சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான ஜனவரி 12,  தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சுவாமி விவேகானந்தரின் 162 வது ஜெயந்தி விழா வரும் ஜனவரி 12ம் தேதி நடக்கிறது.


இதனை முன்னிட்டு, ஆடுதுறை தேர்வு நிலை பேரூராட்சி மற்றும் தஞ்சாவூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடமம் இணைந்து தஞ்சாவூர் மாவட்ட அளவிலும் மற்றும் தமிழ்நாடு மாநில அளவில் இறகுப்பந்து போட்டி நடக்கிறது மாவட்ட அளவில் ஜனவரி 6, 7 தேதிகளிலும், மாநில அளவிலான போட்டிகள் ஜனவரி 10, 11, 12 ஆகிய தேதிகளில் ஆடுதுறையில் நடக்கிறது. 


இதற்கான அழைப்பிதழை உலகளாவிய ராமகிருஷ்ண மடத்தின் அகில உலக துணைத் தலைவர் பூஜ்யஸ்ரீ ஸ்ரீமத் சுவாமி கவுதமமானந்த மகராஜ் தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் நேற்று மாலை வெளியிட அதனை ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார். 


இந்த நிகழ்ச்சியில் தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் தலைவர் ஸ்ரீமத் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ், ஆடுதுறை பேரூராட்சி செயல் அலுவலர் சி.ராம பிரசாத், துணைத் தலைவர் கமலா சேகர் மற்றும் கவுன்சிலர் பாலதண்டாயுதம், பாமக மாவட்ட நிர்வாகிகள் மதி விமல், எஸ்.கே. ரமேஷ், தமிழ்வேந்தன், இளையராஜா, சாமிநாதன், வினோத், இளஞ்செழியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். போட்டியில் பங்கேற்கும் அணிகள் வரும் ஜனவரி 4ம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad