ஸ்ரீராமகிருஷ்ண மடம், ராமகிருஷ்ண மிஷனின் துணைத் தலைவரும், மூத்தத் துறவியுமான தவத்திரு ஸ்ரீமத் சுவாமி கெüதமானந்தஜி மகராஜ் தஞ்சாவூருக்கு டிசம்பர் 23 ஆம் தேதி வந்தார். இவர் மாணவ, மாணவிகளின் திருப்பாவை பாராயணம், ராமநாம சங்கீர்த்தனம், சிறப்பு பஜனை, 24 ஆம் தேதி வீணை இசை, விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம், பஜனை, சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இதைத்தொடர்ந்து, திங்கள்கிழமை மாலை ஸ்ரீராமகிருஷ்ணர், அன்னை சாரதா தேவி, சுவாமி விவேகானந்தர் ஆகிய தெய்வத் திருமூவருக்கு 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொண்டாற்றி வரும் தஞ்சாவூர் நல்லாசிரியர் ஜெ. பாலகுரு, முத்துராமகிருஷ்ணன், பேராசிரியை டி. இந்திரா, அகிலா, ச. பரமானந்தம், பாரத் ரவீந்திரன், கும்பகோணம் ஜி. வெங்கடராமன், திருச்சி ப. சிதம்பரம், சென்னை விவேகா மணியன், செங்கம் எஸ். பாண்டுரங்கன் ஆகியோருக்கு சேவா விருதுகளை தவத்ங்கிய தவத்திரு ஸ்ரீமத் சுவாமி கெüதமானந்தஜி மகராஜ். உடன் தஞ்சாவூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ் உள்ளிட்டோர்.
No comments:
Post a Comment