தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் பெரியார் அம்பேத்கர் நூலகத்தில் தமிழ் வழிக் கல்வி இயக்கம் சார்பில் முப்பெறும் விழா நடைப்பெற்றது.மெய்ச் சுடர் நா.வெங்கடேன் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்வில் தமிழ் நாள்காட்டி அறிமுக விழா.தமிழ் இலக்கியத்திறனாய்வு தேர்வில் வெற்றிப் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா.திருக்குறல் சாதனை சிறுவனுக்கு பாராட்டு விழா என முப்பெறும் விழா நடைப்பெற்றது.
இவ்விழாவிற்கு தமிழ் வழிக் கல்வி இயக்கத்தின் பொறுப்பாளர் அ.செ.சிவகுமார் தலைமை வகித்தார். தமிழ் வழிக் கல்வி இயக்கத்தின் தலைவர் அ.சி.சின்னப்பதமிழர் நாள் காட்டியை அறிமுகம் செய்து உரையாற்றினார். இவ்விழாவில் தமிழ் ஆர்வலர்கள் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர். நிறைவாக த.பழனிவேல் அனைவருக்கும் நன்றி கூறினார்.
- பேராவூரணி செய்தியாளர் த.நீலகண்டன்
No comments:
Post a Comment