தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் தந்தை பெரியார் அவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பேராவூரணி சேதுபாவாசத்திரம் ஒன்றிய நகர திராவிடர் கழகம் சார்பில் பேராவூரணி தந்தை பெரியார் படிப்பகத்தில் இருந்து பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மானமிகு நா அசோக் குமார் அவர்கள் தலைமையில் ஊர்வலமாக சென்று திராவிடர் கழக மாவட்ட செயலாளர் மல்லிகை வை.சிதம்பரம் அவர்கள் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.
இந்நிகழ்வில் திராவிடர் கழகம் திராவிட முன்னேற்ற கழகம் இந்திய தேசிய காங்கிரஸ் .இந்திய கம்யூனிஸ்ட் .மார்க்சிய கம்யூனிஸ்ட் . மறுமலர்ச்சி திமுக .விடுதலை சிறுத்தைகள் .திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் ஏராளமான சமூக அமைப்புகள் கலந்து கொண்டனர்.
- பேராவூரணி செய்தியாளர் த.நீலகண்டன்.
No comments:
Post a Comment