தஞ்சாவூர் ஹெரிடேஜ் ஆர்ட் அண்ட் கல்சுரல் அகாடமி காவிரிக்கலை அரன் அறக்கட்டளை ஆகிய இணைந்து நடத்திய தஞ்சை ஆருத்ர நாட்டியத் திருவிழா பெத்தண்ணான் கலையரங்கில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. டிசம்பர் 22 தேதி முதல் 28 தேதி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.தினசரி மாலை 5 மணிக்கு தொடங்கும்.
தொடர்ந்து யோகம் ரியல் எஸ்டேட் இரா செழியன், சுவாமிமலை ஸ்ரீ சுவாமிநாத சுவாமி வழிபாட்டுக் குழு டிரஸ்டி, தலைவர் லயன் பி சிவசங்கரன், பாரத் கல்விக்குழுமம் நிறுவனர் புனிதா கணேசன் ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினார். விழாவில் தஞ்சாவூர் சோழர் கலை மன்ற தலைவர் ஏகேஆர்.ரவிச்சந்தர் பங்கேற்றார் .
இதில், 16 வயது முதல் 25வயது வரை உள்ள நாட்டியக் கலைஞா்கள் கலந்து கொண்டு நாட்டியம் ஆடினா், இந்த நிகழ்ச்சியில் தனி நபா் நாட்டியம் மற்றும் குழு நாட்டியம் நடைபெற்றது. குழு நாட்டியங்களில் அதிக பட்சமாக 4 போ் முதல் 12 போ் வரை பங்கேற்றனா். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு ஆருத்ரா நாட்டிய மயில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது .நாட்டியபள்ளி குருமார்களுக்கு நாட்டிய. சிரோன் மணி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த நாட்டிய விழாவில் பங்கேற்ற அனைத்து கலைஞா்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
முன்னதாக ஹெரிட்டேஜ் ஆர்ட் அண்ட் கல்சுரல் அகாடமி குரு ஹரிஹரன் ஹேரம்பநாதன் வரவேற்றார். நிறைவில் திருவையாறு காவிரிக்கலை அரன் அறக்கட்டளை கலைச்சுடர் மணி குரு வஜ்ரவேல் கலியமூர்த்தி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment