தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அருகே உள்ள ஸ்ரீரங்கராஜபுரம் த்தில உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. மறைந்த முன்னாள் இந்தியன் ஆயில் உதவி விற்பனை மேலாளர் சந்திரசேகர் நினைவு நாள் முன்னிட்டு உஷா சந்திரசேகர், உமா சீனிவாச மூர்த்தி,எம் ஜே எப் லயன் சுபா சாமிநாதன் ஆகியோர் குடும்பத்தார் நிதியுதவியுடன் குடந்தை மகாசக்தி லயன்ஸ் சங்கம் இணைந்து ஸ்ரீரங்கராஜபுரம் த்தில உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமில் பந்தநல்லூர் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த 172 க்கு மேற்பட்ட பொதுமக்கள் கண் நீர் அழுத்தம், கண் குறைபாடு, பார்வை திறன் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளை பெற்றனர். 32.பேர் கண்புரை அறுவை சிகிச்சை செய்ய மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அன்றைய தினமே அனுப்பி வைக்கப்பட்டனர் 30 நபர்களுக்கு விலை இல்லா கண்ணாடி வழங்கப்பட்டது.
முகாமில் மாவட்டத் தலைவர் கண் சிகிச்சை முகாம், மண்டல தலைவர், வட்டாரத் தலைவர் ஆகியோரும் கலந்து கொண்டனர், தொண்டாற்றிய அரிமாக்களுக்கு எங்களது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் என குடந்தை மகாசக்தி லயன்ஸ் சங்கம் தலைவர் செயலாளர் பொருளாளர் ஆகியோர் கூறினார்.
No comments:
Post a Comment