காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் 50 ஆயிரம் நாட்டு இன மீன் குஞ்சுகள் விடப்பட்டது. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday 17 December 2023

காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் 50 ஆயிரம் நாட்டு இன மீன் குஞ்சுகள் விடப்பட்டது.


அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம், தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் ஆறுகளில் நாட்டு இன நன்னீர் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் 50 ஆயிரம் நாட்டு இன மீன் குஞ்சுகள் விடுவதற்கு முடிவு செய்யப்பட்டது. 


நேற்று அழிவின் நிலையில் உள்ள நாட்டின மீன் குஞ்சுகளான  ரோகு 10 ஆயிரம், மிர்கால் 15 ஆயிரம்,  கல்பாசு 25 ஆயிரம் என மொத்தம் 50 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடும் பணி அணைக்கரை கீழணையில் கொள்ளிடம் ஆறுகளில் அரசு தலைமை கொறடா கோவி செழியன் தலைமையில் நடந்தது. அப்போது அவர்  பேசுகையில், இந்த திட்டத்தின் மூலம் ஆற்றில் நாட்டு இன மீன் உற்பத்தி ஆண்டிற்கு 20 டன்கள் கூடுதலாக உற்பத்தியாவதற்கு வாய்ப்புள்ளது என்றார்.


இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம், திருப்பனந்தாள் ஒன்றிய குழு துணை தலைவர் அண்ணாதுரை, உதவி இயக்குநர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தஞ்சாவூர்  உதவி இயக்குனர் மணிகண்டன்,  ஆய்வாளர் ஆனந்த், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலர்கள் மற்றும் அணைக்கரை உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad