தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே பிரசித்தி பெற்ற நவக்கிரக கோயில்களில் பிரதானமாகவும் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமானதாக விளங்கக்கூடிய சிவ சூரியனார் கோயிலில் தமிழ் மாதம் முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் விசேஷ பூஜை நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் மார்கழி மாத முதல் ஞாயிற்றுக் கிழமையை முன்னிட்டு மூலவரான சிவசூரிய பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் தொடர்ந்து உஷா தேவி பிரதியுக்ஷாதேவி சமேத சிவசூரியபெருமான் உற்சவருக்கு பால் தயிர் சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்களும் தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்ட கலசங்கள் புறப்பட்டு சுவாமிக்கு மக் அபிஷேகமும் தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய சிவசூரிய பெருமானுக்கு மகா தீபாராதனையும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
No comments:
Post a Comment