தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அடுத்த முடச்சிக்காடு கிராமத்தில் தனது மகன் வழி பேத்தியுடன் ஆதரவற்ற நிலையில் தினமும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் புஷ்பவள்ளி வயது 75 என்பவரது வீடு திடிரென தீப்பிடித்து எரிந்து விட்டது .இதில் முற்றிலும் சேதமானதால் மூதாட்டி அழுது புலம்பியுள்ளார்.
சம்பவமறிந்த பேராவூரணி எம்.எல்.ஏ அசோக்குமார் நேரில் சென்று மூதாட்டிக்கு ஆறுதல் கூறி ரூ 10.000 நிதியுதவி செய்து இன்னும் தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்தார். உடன் கிராமத்தினர் மற்றும் அனைவரும் ஆறுதல் கூறினர்.
- பேராவூரணி செய்தியாளர் த.நீலகண்டன் .
No comments:
Post a Comment