தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கோட்டூர் கிராமத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கஞ்சனூர், கோட்டூர், துகிலி, மணலூர் உள்ளிட்ட நான்கு கிராமங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மகளிர் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதத்திலும், பெண்கள் சுயதொழில் செய்ய ஊக்கப்படுத்தும் விதத்தில் கோட்டூர் கற்பகாம்பாள் கல்வி பயிலகத்தில் இலவச தையல் பயிற்சி முகாம் கடந்த ஜூன் மாதம் தமிழக அரசு தலைமை கொறடா கோவி.செழியன் ஏற்பாட்டில் தொடங்கப்பட்டது.
6மாத பயிற்சியாக இந்த தையல் பயிற்சி வகுப்பு நடந்தது. பயிற்சி முடித்த 100க்கும் மேற்பட்ட மகளிர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா தமிழக அரசு தலைமை கொறடா கோவி செழியன், மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம் முன்னிலையில் வகித்தனர். திருப்பனந்தாள் ஒன்றிய துணைப் பெருந்தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார்.
மேலும் பயிற்சி முடித்த 100க்கும் மேற்பட்ட மகளிர்களுக்கு தொழிலதிபர் சரவணபெருமாள் ஏற்பாட்டில் தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தனர்.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டூரில் 4கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மகளிர்க்கான இலவச தையல் பயிற்சி சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment