ஏழை மாணவர்களுக்கு இலவச டியூசன் சென்டர். - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday, 14 December 2023

ஏழை மாணவர்களுக்கு இலவச டியூசன் சென்டர்.


கும்பகோணம் சுற்றி கிராம  பகுதிகளைச் சேர்ந்த ஏழை மாணவர்களும் கல்வியில் சாதிக்கவேண்டும் என்பதற்காக அவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் டியூஷன் நடத்திவரும் பெண்மணியன் மனிதாபிமான சேவையை அப்பகுதியினர் பாராட்டியுள்ளனர்.

தான் படித்த கல்வி மற்றவர்களுக்கும் பயனளிக்கவேண்டும் என்ற நல்லெண்ணம் காரணமாக கும்பகோணத்தை சேர்ந்த ஸ்ரீ கலா என்பவரால் உருவாக்கப்பட்டது தான் கமலா ஸ்ரீதரன் கல்வி மையம், இதன்மூலம் கும்பகோணம் சுற்றுவட்டாரப் கிராம பகுதிகளைச்  சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு இலவசமாக டியூஷன் நடத்தி வருகின்றனர். காமாட்சி ஜோசியர் ,காளாஸ்திரி கோயில் பின்புறம் வீட்டின் வளாகத்தில் தினசரி காலை 5 மணி முதல் 8 மணி வரை மாலை 4 மணி முதல் 8 மணி வரை இரண்டு வேளைகளிலும் வகுப்புகள் நடத்துகின்றனர். 


இவர்களிடம் எல்கேஜி முதல் ப்ளஸ் 2 வரை படிக்கும் 60 மாணவ,மாணவிகள் படிக்கின்றனர். டியூஷன் சென்டர் ஒருங்கிணைப்பாளர்  ஸ்ரீகலா கூறுகையில்,“ கமலா ஸ்ரீதரன் கல்வி மையம் கடந்த 1993ல் ஆரம்பிக்கப்பட்டது. எங்களது கல்வி மையத்தில் பயிற்சி பெறுவதில் பல நன்மைகள் உள்ளன. பயிற்சி வகுப்புகள் ஒரு வலுவான அடிப்படை அடித்தளத்தை உருவாக்குகின்றன, எனவே மாணவர்கள் பாடங்களில் சிறப்பாக ஈடுபடுவதை உணர்கிறார்கள். அவர்கள் ஆசிரியர்களின் முன்னிலையில் ஆழ்ந்த கற்றல் அனுபவத்தைப் பெறுகிறார்கள். 


அவர்கள் குறிப்பிட்ட பாடத்தில் அனுபவத்தை செறிவூட்டிய சிறந்த ஆசிரியர்களிடம் இருந்து கற்றுக்கொள்கிறார்கள். மாணவர்கள் தலைப்பைக் காட்சிப்படுத்தவும், நிஜ வாழ்க்கைப் பயன்பாடுகளுடன் தொடர்புபடுத்தவும் ஆசிரியர்கள் கற்பிக்கிறார்கள். இந்த மையம் மாணவர்களுக்கு சிறந்த கற்றல் அனுபவத்தை வழங்குவதற்காக ஒருங்கிணைக்கிறது. இதைத் தவிர இசை பரதநாட்டியம் வெஸ்டர்ன் போன்ற பல கலைகளை கற்றுக் கொடுக்கிறோம். 


எங்களது கல்வி நிலையத்தில் படித்தவர்கள் அரசு துறை, காவல் துறை, கல்வி ஆசிரியர், வழக்கறிஞர், தொழிலதிபர் என பல துறைகளில் பணியாற்றி வருகின்றனர் எனக் கூறினார், கல்வி மையத்தில் சேர்ந்த பிறகு தங்களது குழந்தைகள் கையெழுத்தை அழகாக எழுதுகிறார்கள் மற்றும் . தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுப்பதாக பெற்றோர் கூறினர். வறுமையில் வாடுவோரிடமும், அன்பு கலந்த சேவை செய்தால் இறைவன் பார்வை நம் மீது படும் என்பதில் ஐயமில்லை, என்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad