தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் தேர்வு நிலை பேரூராட்சியில் புதிதாக ரூ 17.50 லட்சம் மதிப்பீட்டில் பேரூராட்சி வாகணங்கள் நிறுத்த கட்டிடம் கட்டப்பட்டு இருந்தது. மற்றும் ரூ 26.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய டேங்கர் வாகனம் வாங்கப்பட்டு இருந்தது இதனை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் கலந்துக் கொண்டு புதிய கட்டிடம் மற்றும் கல்வெட்டை திறந்து வைத்தார்.
பின்னர் புதிய டேங்கர் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார் இந்நிகழ்வில் பேருராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர். செயல் அலுவலர் பழனிவேல். பேருராட்சிகளின் உதவி இயக்குனர் மாகின் அபூபக்கர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பேரூராட்சி பணியாளர்கள் கலந்துக் கொண்டனர்.
- பேராவூரணி த.நீலகண்டன்.

No comments:
Post a Comment