காஷ்மீர் நமது நாட்டின் மகுடம் எனும் வரலாற்று கண்காட்சி தொடக்க விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா நடந்தது. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday 23 November 2023

காஷ்மீர் நமது நாட்டின் மகுடம் எனும் வரலாற்று கண்காட்சி தொடக்க விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா நடந்தது.


தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா கல்யாணபுரம் ஸ்ரீவத்ஸத்தில் காஷ்மீர் நமது நாட்டின் மகுடம் எனும் தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் தலைவர் ஸ்ரீமத் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ் தலைமை வகித்து பேசுகையில், காஷ்மீர் பிரதேசம் பாரதத்தின் பாரம்பரிய சிறப்பு கொண்டது. ஸ்ரீசாரதா அம்பாளின் அருளால் ஆதிசங்கரர், ராமானுஜாச்சாரியார், திருமூலர், அபிநவ குப்தர் மற்றும் சுவாமி விவேகானந்தர் போன்ற பல மகான்கள் அங்கு சென்று தவமியற்றி பாரதத்தின் ஆன்மீகம், தத்துவம், மருத்துவம், இலக்கியம் போன்றவற்றைத் தழைத்தோங்கச் செய்தார்கள்.

அப்படிப்பட்ட காஷ்மீரத்தின்  பெருமையைப் புரிந்து கொண்டு அதைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றார். கோயில் கட்டடக்கலை ஆராய்ச்சியாளர் ஸ்ரீ வத்ஸம் சீதாராமன் காஷ்மீரில் இருந்து வந்த திருமூலர் எனும் தலைப்பில் பேசினார். தொல்லியல் ஆய்வாளர் டி.கே. வி. ராஜன் பேசுகையில், காஷ்மீரத்துக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள தொடர்பு 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. கி.பி. 6ம் நூற்றாண்டிலேயே, காஞ்சிபுரத்திலிருந்து பல மாணவர்கள் இந்து மற்றும் பவுத்த மதங்களைப் படிப்பதற்காக காஷ்மீருக்கு சென்றுள்ளார்கள். இதற்கு இலக்கிய ஆதாரங்கள் உள்ளன. 


இளைய தலைமுறைக்கு காஷ்மீர், இலங்கையின் பெருமை, அதன் பங்களிப்பு தெரிய வேண்டும். பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் காஷ்மீர், இலங்கை வரலாற்று பெருமைகள் பற்றி இல்லாமல் உள்ளது. காஷ்மீர் நமது நாட்டின் பண்பாடு கலாச்சாரத்தை எவ்வாறு உயர்த்தியது என்பதை இந்த வரலாற்று கண்காட்சி உணர்த்திடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகளில் கண்காட்சி நடத்திட விரும்பினால் அதற்கு வழிவகை செய்து தருகிறோம் என்றார்.


காஷ்மீர் இந்தியாவின் மகுடம் எனும் நூலை வெளியிட அதனை புவியியல் ஆய்வாளர் செல்வ முத்துக்குமார் பெற்றுக்கொண்டார். வரலாற்றுக் கண்காட்சியை பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் உட்பட பலர் கண்டு குறிப்பெடுத்து பயனடைந்தனர். தொடர்ந்து மூன்று நாட்கள் கண்காட்சி நடக்கிறது. கலைமாமணி ஜானகி அம்மாள் இறை வணக்கம் மற்றும் குரு வணக்கம் பாடினார். ரங்கராஜன் நன்றி கூறினார். 

No comments:

Post a Comment

Post Top Ad