தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சோழபுரத்தில் இளைஞர்கள் கொலை விவகாரத்தில் CBIவிசாரணை மேற்கொள்ள பாமக மாவட்ட செயலாளர் ம.க.ஸ்டாலின் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday 23 November 2023

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சோழபுரத்தில் இளைஞர்கள் கொலை விவகாரத்தில் CBIவிசாரணை மேற்கொள்ள பாமக மாவட்ட செயலாளர் ம.க.ஸ்டாலின் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை.


தஞ்சாவூர் மாவட்டம், குடந்தை ஒன்றியம், சோழபுரம் மணல்மேடு கிராமம் குடியானத் தெரு பகுதியைச் சேர்ந்த பாண்டியன், வெண்ணிலா தம்பதியரின் மகன் அசோக்ராஜ் பாமக உறுப்பினர் ஆவார். இவர் திடீரென காணாமல் போய் வீடு திரும்பாத நிலையில் அவரது பாட்டி பத்மினி சோழபுரம் போலீசில் இது குறித்து கடந்த 13ம் தேதி புகார் தெரிவித்துள்ளார். 

போலீஸ் விசாரணை நடத்திய போது, சோழபுரம் கீழத்தெருவை சேர்ந்தவர் கேசவமூர்த்தி போலி சித்த வைத்தியர் என்பவர் அசோக்ராஜிக்கு கஞ்சா போதை மருந்து கொடுத்து சுன்னத் செய்துள்ளான், மேலும், ஆடுகளை தோல் உரிப்பதை போல், அசோக்ராஜ் உடலையும் தோல் உரித்து, தலையை துண்டாக வெட்டி, மூளையை வறுத்து சாப்பிட்டதாகவும், நெஞ்சு எலும்பை சூப் வைத்து சாப்பிட்டதாகவும், இதயம், ஈரல் ஆகியவற்றை பொறித்து சாப்பிட்டதாகவும், கை கால்களை தனித்தனியாக வெட்டி உடலை தனது வீட்டின் கழைவறையில் புதைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 


இதைபோல், முகம்மது அனஸ் என்ற இஸ்லாமிய இளைஞரையும் 2021-ஆம் ஆண்டு கொலை செய்து புதைத்துள்ளான் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், உடல் உறுப்புகள் விற்கப்பட்டுள்ளதாகவும், தனது டைரியில் 194 நபர்களின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளான். கேசவமூர்த்தி வீட்டில் புதைக்கப்பட்டிருந்த அசோக்ராஜனின் உடலை கும்பகோணம் கோட்டாட்சியர், வட்டாட்சியர் முன்னிலையில் தடவியல் நிபுணர்கள் வெளியில் எடுத்து, அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தனர்.

தனது தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்து வந்து, அதனை பொடியாக்கி, தனியார் மருந்து கடைகளில் போதை மாத்திரைகள் வாங்கி, அதனுடன் கலந்து கஞ்சா போதை பொருட்கள் தயாரித்து தமிழ்நாடு முழுவதும் வியாபாரம் செய்து வந்துள்ளான். இதனால் நூற்றுக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோல் பிரச்சனை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த விவகாரத்தில் முக்கிய பிரமுகர்கள் தலையீடு உள்ளதாக தெரிய வருகிறது. எனவே, கேசவமூர்த்தி மீது நடவடிக்கை எடுத்து மரணதண்டனை வழங்கிட ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். 


மேலும், இவ்வழக்கினை உடனே CBI-க்கு மாற்றக்கோரியும், கொலைசெய்யப்பட்ட இளைஞர்கள் அசோக்ராஜ் மற்றும் முகம்மது அனஸ் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் மற்றும் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிடுமாறும், தொடர்புடைய அனைவரையும் தக்க நடவடிக்கை எடுக்குமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படி இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கும் வகையில் எந்த நபரும் செயல்படாமல் தடுக்க வேண்டும். அதற்கு ஏதுவாக தனிக்குழு ஒன்றை அமைத்து ஒவ்வொரு பகுதிகளிலும் கண்காணித்து இளைஞர்களை போதைப் பழக்கத்திலிருந்து விடுதலை பெற தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


நமது தஞ்சாவூர் மாவட்டம் போதை இல்லாத மாவட்டமாக பெருமை கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.என்ற கோரிக்கை மனுவை தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்பிடம் தஞ்சை மாவட்ட பாமக செயலாளர் ம.க.ஸ்டாலின் நேரில் வழங்கினார்.

No comments:

Post a Comment

Post Top Ad