தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் கோயில் வழிபாட்டில் இசை பாரம்பரியம் குறித்த கருத்தரங்கு. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday 24 November 2023

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் கோயில் வழிபாட்டில் இசை பாரம்பரியம் குறித்த கருத்தரங்கு.


தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் இசைத் துறை சார்பில் கோவில் வழிபாட்டில் இசைமரபு துறைக் கருத்தரங்கம் கலைப்புலக் கருத்தரங்க கூடத்தில் இன்று நடைபெற்றது.

கருத்தரங்க நிகழ்ச்சியில் துணைவேந்தர் வி.திருவள்ளுவன் தலைமை வகித்தார்.சென்னை தமிழ்நாடு அரசு கலைக் கல்லூரி முன்னாள் முதல்வர் முனைவர் அமுதா பாண்டியன் சிறப்புரையாற்றினார், கலைக்குளம் கலைப்புலம் முதன்மையர் முனைவர் பெ. இளையாப்பிள்ளை வாழ்த்துரையாற்றினார்.


கருத்துரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா.மாதவி நோக்கவுரையாற்றினார், தொடர்ந்து திருச்சி இசைக் கலைஞர் முனைவர் காஷ்யப் மகேஷ், அண்ணாமலை பல்கலைக்கழகம் தேவார பேராசிரியர், முனைவர் தி .பாலச்சந்திரன், அண்ணாமலை பல்கலைக்கழகம் நாதஸ்வர பேராசிரியர் முனைவர் சின்னமனூர் அ.விஜய், கார்த்திகேயன், திருவாரூர் அரசு இசைப்பள்ளி நாட்டிய ஆசிரியர் கே பி கே சந்திரசேகர் ஆகியோர் கோயில் வழிபாட்டில் இசை மரபு, தேவார இசை மரபு, மங்கல இசை மரபு, நாட்டிய மரபு ஆகிய ஒவ்வொன்று மரபு  நிலைத்தன்மை பற்றி விளக்கமாக கட்டுரையாக  உரையாற்றினார்கள்.


முன்னதாக இசைத்துறை இணை பேராசிரியர் முனைவர் செ .கற்பகம் வரவேற்றார்.நிறைவில் கௌரவ உதவி பேராசிரியர் முனைவர் சி சத்தியவதி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad