பேராவூரணி அருகே மக்கள் நேர்காணல் முகாம். - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday 22 November 2023

பேராவூரணி அருகே மக்கள் நேர்காணல் முகாம்.


தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம், செங்கமங்கலம் கிராமத்தில் அருள்மிகு பெத்தபெருமாள் கோவில் திடலில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், மக்கள் நேர்காணல் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது. 


பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அ.அக்பர் அலி வரவேற்றார். தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.சு பழனிமாணிக்கம், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் ராஜரத்தினம், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் இலக்கியா நெப்போலியன், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் உ.துரை மாணிக்கம், ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.செல்வம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நிறைவாக பேராவூரணி வட்டாட்சியர் தெய்வானை நன்றி கூறினார். 

மக்கள் நேர்காணல் முகாமில், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 25 பயனாளிகளுக்கு ரூபாய் 34 ஆயிரத்து 200 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், வேளாண்மை துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு வேளாண் உபகரணங்கள், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் சுய உதவிக்குழுவிற்கு ரூபாய் 15 லட்சம் கடன் உதவி, தோட்டக்கலை துறையின் மூலம் 3 பயனாளிகளுக்கு இடுபொருட்கள் மானியம், ரூபாய் 33 ஆயிரத்து 625 என மொத்தம் ரூ.15 லட்சத்து 67 ஆயிரத்து 820 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 


மேலும், சமூக திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை என மொத்தம் 25 பயனாளிகளுக்கான ஆணையும், 26 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவும் வழங்கப்பட்டது. முன்னதாக, வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை, சுகாதாரத்துறை, குழந்தை வளர்ச்சி திட்டம் ஆகியவற்றின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை, மாவட்ட ஆட்சியர், மக்கள் பிரதிநிதிகள் பார்வையிட்டனர். செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில், மருத்துவ முகாம் நடைபெற்றது. நிகழ்வில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 


- செய்தியாளர் த.நீலகண்டன்

No comments:

Post a Comment

Post Top Ad