தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்பு - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday 23 November 2023

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்பு


தஞ்சையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கோட்டாட்சியர் இலக்கியா தலைமையில் நடைபெற்றது, இதில் தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு பகுதியில் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். இந்த கூட்டத்தில் காவேரி டெல்டா விவசாயிகள் சங்கம் தலைவர் ஏ கே ஆர் ரவிச்சந்தர்  பேசியதாவது, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் மேல்மா சிப்காட் திட்டத்தின் நிலம் கையகப்படுத்தும் போராட்டம் வருங்காலத்தில் நம்மை விட்டுப் போய்விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் நலனையும், அவர்களின் வறுமையையும் உணர்ந்து, அறவழியில் தங்கள் தரப்பு நியாயத்திற்காக அமைதியாகப் போராடி குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நெல்லையில் இருந்து சென்னை வரை குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். துரோகிகள், கொலையாளிகள் போல் தனி சிறைகளில் அடைத்து வைத்து கொடூர அடக்குமுறையை கையாளும் தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

இயற்கையோடு போராடி ஆழ்குழாய் கிணறு மூலம் சம்பா சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு சம்பா தொகுப்பு திட்டத்தை உடனடியாக வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கு முதல்வர் பரிந்துரை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன், மேட்டூர் அணையின் முடிவில் சம்பா/தாளடி நடவுப் பணிகளை மேற்கொள்ளும் மற்றும் சிறு விவசாயிகளுக்கு நேரடி விதைப்பு செய்யும் விவசாயிகளுக்கு வேளாண் பொறியியல் துறை மூலம் இலவசமாக உழவு செய்து தர  கேட்டுக்கொள்கிறேன்.


தஞ்சாவூர் மாநகராட்சிப் பகுதிகளில் இரவு பகலாக சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் போக்குவரத்துக்கு இடையூறாக இரு சக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். குறிப்பாக ரெட்டிபாளையம் ரோடு, சீனிவாசபுரம், புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, பிள்ளையார்பட்டி ரவுண்டானா அருகே, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் கூட, மாடுகள் சுற்றித்திரிகின்றன. மாடுகளை பிடிக்க வாகனம், மாடுகளை அடைக்க தங்குமிடங்கள் மற்றும் மாடுகளை கட்டாதவர்களுக்கு உரிய அபராதம் விதிக்கப்படும் என  மேயர் அறிவித்துள்ளார். எனவே, மாநகராட்சி பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து காப்பகத்தில் அடைத்து மாடு வைத்திருப்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 


 தஞ்சாவூர் சோழகலை மன்றம் கள்ளச்சாராயம் ஒழிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை நடத்தி மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், காவல் துறை உதவி ஆய்வாளர் ஆகியோருக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்து வருவதால், வரும் டிசம்பரில் நமது விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் துவக்கி வைக்க வருமாறு எங்கள் கோட்ட நீதிபதி வருவாய் கோட்டாட்சியர் கேட்டுக்கொண்டார்  


- தஞ்சாவூர் செய்தியாளர்  ஏசுராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad