தஞ்சையில் எஸ்.டி.பி.ஐ கட்சி மாவட்ட கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றம். - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday, 20 November 2023

தஞ்சையில் எஸ்.டி.பி.ஐ கட்சி மாவட்ட கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றம்.


தஞ்சாவூர் எஸ்.டி.பி.ஐ  கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதி தலைவர் , செயலாளர் மற்றும் கிளை தலைவர் செயலாளர் சந்திப்பு நிகழ்ச்சி எஸ்.டி.பி.ஐ கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் ஜே பி ஆர் ரியாஸ் அஹமத் தலைமையில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் தஞ்சை மண்டல தலைவருமான அண்ணன் தப்ரே ஆலம் பாதுஷா அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த கூட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர்  கே.டி.எம் அப்துல் அஜீஸ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் . எஸ்.டி.பி.ஐ கட்சியின் தொண்டர் அணி மாவட்ட செயற்குழு உறுப்பினர்  தௌபீக் முன்னிலை வகித்தார்.


தொடர்ந்து  தஞ்சை தொகுதி செயலாளர் சகோதரர் ஜாகிர் உசேன், பாபநாசம் தொகுதி தலைவர் சகோதரர் நேன்பு சாஹிப் இப்ராஹிம் ,செயலாளர்  ராஜா முகமது ,தஞ்சை கீழவாசல் கிளை தலைவர் சகோதரர் முகமது யாசீன்  அவனியாபுரம் கிளை இணைச் செயலாளர் சகோதரர் மாஹின் கிளை பொருளாளர்  புருஹானுதீன், கூனஞ்சேரி கிளை நிர்வாகிகள் முகமது மைதீன், முகமது மஹபூஸ், சையத் முஸ்தபா  மேலக்காவேரி கிளை தலைவர்  மஹாதீர் , சகோதரர் யூசுப்  நாச்சியார்கோவில் கிளை நிர்வாகி  காலித் ,பரக்கத் அலி  உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


தீர்மானங்கள்:

  1. ஜனவரி 07 மதுரையில் நடைபெற இருக்கும் வெல்லட்டும் மதச்சார்பின்மை மாநாட்டிற்கு நகர, கிளை வாரியாக அதிகமான மக்களை அழைத்து செல்வது என்று தீர்மானிக்கப்பட்டது.
  2. மேலும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கிளைகளிலும் பாக முகவர்களை தேர்வு செய்வது குறித்தும் பூத் வாரியான கிளைகளை முழுமைப்படுத்துவது குறித்தும் தீர்மானிக்கப்பட்டது.
  3. மேலும் டிசம்பர் 6 கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட்டில் நடக்க உள்ள பாபரி மீட்பு போராட்டத்திற்கு பெருவாரியான மக்களை கலந்து கொள்ள செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இறுதியாக தஞ்சை தொகுதி தலைவர் சகோதரர் முகமது ரபீக் அவர்கள் நன்றியுரை ஆற்றினார் 

No comments:

Post a Comment

Post Top Ad