காவிரி நீரை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் சார்பில் சிறப்பு வழிபாடு. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday 15 November 2023

காவிரி நீரை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் சார்பில் சிறப்பு வழிபாடு.


காவிரி நீரை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் சார்பில் 13 ஆம் ஆண்டு காவேரி அம்மன் ரத யாத்திரையில் கஞ்சனூர் வடகாவிரி படித்துறையில் காவேரி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.


காவிரி நீரை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் பாதுகாக்க வேண்டும் போன்ற பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் சார்பில் கர்நாடக மாநிலம் தலை காவிரியில் இருந்து ஆண்டுதோறும் காவிரி அம்மன் ரத யாத்திரை காவிரி ஆற்றின் முக்கிய படித்துறைகளில் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். 


13ஆம் ஆண்டு காவிரி அம்மன் ரத யாத்திரை தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள காவிரி படித்துறைகளில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது அந்த வகையில் கஞ்சனூர் வட காவிரி படித்துறையில் நடந்த சிறப்பு பூஜையில் காவிரி அம்மனுக்கு மஞ்சள் பால் தயிர் சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.


தொடர்ந்து சூரியனார் கோயில் ஆதீனம் 28 வது குருமகா சன்னிதானம் முன்னிலையில் காவேரி அம்மனுக்கு மகா தீபாராதனையுடன் விசேஷ பூஜைகள் நடந்தது. துறவிய பெருமக்கள் மகா தீபம் ஏற்றியும் பக்தர்கள் காவிரி ஆற்றில் தீபம் ஏற்றியும் மலர் தூவி வழிபாடு செய்தனர். 


- செய்தியாளர் விக்னேஷ்

No comments:

Post a Comment

Post Top Ad