மழையால் 5 குடிசை வீடுகள் இரண்டு ஓட்டு வீடுகள் இடிந்து சேதம். அரசு விரைந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு நிவாரண உதவிகளும் வீடு கட்டி தரவும் பாதிக்கப்பட்டோர் கோரிக்கை. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday 15 November 2023

மழையால் 5 குடிசை வீடுகள் இரண்டு ஓட்டு வீடுகள் இடிந்து சேதம். அரசு விரைந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு நிவாரண உதவிகளும் வீடு கட்டி தரவும் பாதிக்கப்பட்டோர் கோரிக்கை.


தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவில் நேற்று முழுவதும் பரவலாக பெய்த மழையால் 5 குடிசை வீடுகள் இரண்டு ஓட்டு வீடுகள் இடிந்து சேதம். அரசு விரைந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு நிவாரண உதவிகளும் வீடு கட்டி தரவும் பாதிக்கப்பட்டோர் கோரிக்கை.


தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் இரவு வரை இடைவிடாது பரவலாக மழை பெய்தது இதனால் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்கியும் காணப்பட்டது. 


இடைவிடாது பெய்த மழையால் திருவடைமருதூர் தாலுகாவில் 5 குடிசை வீடுகள் மற்றும் இரண்டு ஓட்டு வீடுகள் இடிந்து சேதமானது. குறிப்பாக பந்தநல்லூர் அருகே கோவில்ராமபுரம் கள்ளர் தெரு பகுதியைச் சேர்ந்த கவிதா சண்முகம் என்பவரது வீட்டின் மேற்கூரையில் வேப்பமரம் முறிந்து விழுந்ததில் வீடு முற்றிலும் சேதமானது வீட்டினுள் வைக்கப்பட்டிருந்த கிரைண்டர் மிக்ஸி உள்ளிட்ட தளவாட சாமான்கள் சேதமானது மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு நிவாரண உதவிகளும் வீடு கட்ட உரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.


- செய்தி மற்றும் படங்கள் செய்தியாளர் விக்னேஷ்

No comments:

Post a Comment

Post Top Ad