அணைக்கரையில் உள்ள சிறப்பு முகாமில் மாவட்ட வடகிழக்கு பருவமழை கண்காணிப்பு அதிகாரி ஆனந்த் நேரில் ஆய்வு. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday 15 November 2023

அணைக்கரையில் உள்ள சிறப்பு முகாமில் மாவட்ட வடகிழக்கு பருவமழை கண்காணிப்பு அதிகாரி ஆனந்த் நேரில் ஆய்வு.


தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் சுற்றுவட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதையடுத்து அணைக்கரையில் உள்ள சிறப்பு முகாமில் மாவட்ட வடகிழக்கு பருவமழை கண்காணிப்பு அதிகாரி ஆனந்த் நேரில் ஆய்வு.


தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை முதல் நேற்று இரவு வரை இடைவிடாது பரவலாக மழை பெய்தது மழையின் காரணமாக திருவிடைமருதூர் தாலுகாவில் ஐந்து கூரை வீடுகள் இரண்டு ஓட்டு வீடுகள் உட்பட ஏழு வீடுகள் இடிந்து சேதமடைந்தன. 


மேலும் கனமழை எச்சரிக்கை எதிரொலியாக தஞ்சை மாவட்ட வடகிழக்கு பருவமழை சிறப்பு அதிகாரியான ஆனந்த் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா திருவிடைமருதூர் வட்டாட்சியர் பாக்யராஜ் உள்ளிட்டோர் கொள்ளிடம் ஆற்று கரையோர பகுதியான அணைக்கரை விநாயகன் தெரு பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டனர் கனமழை எதிரொலியாக கொள்ளிடம் ஆற்றில் நீர் திறக்கப்படும் நிலை வந்தால் இப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து முகாமில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்தும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினர், பள்ளி குழந்தைகளிடம் தீபாவளி பண்டிகை எவ்வாறு கொண்டாடினீர்கள் என்று கேட்டு மகிழ்ந்த அதிகாரிகள்.


அணைக்கரையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமான ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வடகிழக்கு பருவமழை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர் அப்போது வடகிழக்கு பருவமழை சிறப்பு அதிகாரியான ஆனந்த் மற்றும் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் பள்ளி குழந்தைகளிடம் தீபாவளி பண்டிகை குறித்து கேட்டறிந்தனர் அப்போது அதிகாரிகளிடம் பள்ளி குழந்தைகள் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடியதாகவும் மேலும் காலை உணவு சிறப்பாக வழங்கப்பட்டு வருகிறது எனவும் மகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.


தொடர்ந்து மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டனர். இன்று காலை முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வந்த நிலையில் தற்போது பரவலாக மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad