ஆடுதுறை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றங்களை தடுக்க 18 லட்சம் மதிப்பீட்டில் நவீன சிசிடிவி கேமராக்கள் அமைக்க பேரூராட்சி மாதாந்திர கூட்டத்தில் தீர்மானம். - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday, 30 November 2023

ஆடுதுறை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றங்களை தடுக்க 18 லட்சம் மதிப்பீட்டில் நவீன சிசிடிவி கேமராக்கள் அமைக்க பேரூராட்சி மாதாந்திர கூட்டத்தில் தீர்மானம்.


தஞ்சை மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றங்களை தடுத்திடும் நோக்கிலும் பொதுமக்கள் பாதுகாப்பு நலனை கருதி 18 லட்சம் மதிப்பீட்டில் நவீன சிசிடிவி கேமராக்கள் அமைக்க பேரூராட்சி மாதாந்திர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தஞ்சை மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சியில் மாதாந்திர சிறப்பு கூட்டம் பேரூராட்சி பெருந்தலைவர் மக ஸ்டாலின் தலைமையில் நடந்தது. பேரூராட்சி துணைத் தலைவர் கமலா சேகர் பேரூராட்சி செயல் அலுவலர் ராமபிரசாத் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் செல்வராணி சிவக்குமார் வரவேற்றார். ஆடுதுறை தேர்வு நிலைய பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொது மக்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு 18 லட்சம் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய சிசிடிவி கேமராக்கள் அமைக்கவும், பேரூராட்சிக்குட்பட்ட சூரியன் தெருவில் உள்ள சமுதாய கூடத்திற்கு கழிவறை வசதி, நமச்சிவாயபுரம் ஆதிதிராவிடர் சுடுகாட்டிற்கு தண்ணீர் வசதி, நடராஜபுரம் மேல அக்ரஹாரத்தில் உள்ள குமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப்பள்ளி முதல்  அம்மன் கோயில் தெரு, கஞ்சான் மேட்டுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் திறந்த நிலையில் உள்ள வடிகால்களில் மூடி அமைக்கும் பணி என 16 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளவும், பத்தாவது வார்டில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் 36 லட்சம் மதிப்பீட்டில் ஹாஜியார் விரிவாக்க நகர் பூங்காவில் பூங்கா மேம்பாட்டு பணியும், 31 லட்சம் மதிப்பீட்டில் பாய்க்கார தெரு சாலை பிள்ளையார் கோயில் குளம் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளவும் மேலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து தூய்மை பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் தயார் நிலையில் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. 


கவுன்சிலர் முத்து பீவி ஷாஜகான் நன்றி தெரிவித்தார், இக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோசி.இளங்கோவன் ம.கபால தண்டாயுதம், மீனாட்சி முனுசாமி, இரா.சரவணன், சாந்தி குமார், சுகந்தி சுப்ரமணியன், மாலதி சிவக்கொழுந்து, பூ.கண்ணன், பரமேஸ்வரி சரவணக்குமார், ஷமீம்நிஷா ஷாஜகான், குமார் வேலுப்பிள்ளை பொறியாளர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். 


செய்தியாளர் விக்னேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad