தஞ்சை மாவட்டம் ஆடுதுறை தேர்வு நிலை பேரூராட்சியில் 40 ஆண்டுகளாக தூய்மை பணியாளராக பணியாற்றிய காத்தவராயன் என்பவர் வயது மூப்பு காரணமாக ஓய்வு பெறுகிறார் இதையடுத்து அவருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா ஆடுதுறை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் ஆடுதுறை பேரூராட்சி பெரும் தலைவர் ம.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது. பேரூராட்சி துணைத் தலைவர் கமலா சேகர் செயல் அலுவலர் ராமபிரசாத் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து தூய்மை பணியாளர் காத்தவராயன் மற்றும் அவரது மனைவிக்கு பட்டாடைகள் வழங்கப்பட்டு மலர்மாலைகள் மற்றும் பட்டு கிரீடம் அணிவிக்கப்பட்டது 40 ஆண்டுகளாக திறம்பட பணியாற்றியதை பாராட்டும் விதத்தில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தங்க மோதிரம் வழங்கப்பட்டது தொடர்ந்து பேரூராட்சி கவுன்சிலர்கள் பணியாளர்கள் குடும்பத்தினர்கள் அவர் பணியாற்றியது குறித்து பாராட்டி நன்றி தெரிவித்தனர் தொடர்ந்து காத்தவராயன் குடும்பத்தினர்கள் சார்பில் பேண்ட் வாத்தியங்கள் வானவேடிக்கைகள் முழங்க அவரை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
நாற்பது ஆண்டுகளாக திறம்பட பணியாற்றிய தூய்மை பணியாளருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடந்ததை அனைவரும் மகிழ்ச்சியுடன் பார்த்தனர்.


No comments:
Post a Comment