பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் உலகமே வியக்கும் அளவில் அமைக்கப்பட்டுள்ளது எனவும் ஜாதி மதங்களைக் கடந்து அனைத்து தரப்பினரும் வழிபட ஏதுவாக ராமர் கோயில் அமைக்கப்பட்டுள்ளது எனவும் முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் உள்ளிட்ட பல இதிகாச நூல்களில் ராமர் வழிபாடு குறித்து நற்செய்திகள் இடம் பெற்றுள்ளன மேலும் வைத்தீஸ்வரன் கோயிலில் முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் நூலில் ராமர் வழிபாடு குறித்தும் இடம் பெற்றுள்ளது எனவும் பல தவ முனிவர்கள் தவம் செய்ததன் புண்ணியமே நமக்கு இத்தகைய பாரத பிரதமர் கிடைத்துள்ளார் எனவும் பாரத பிரதமரின் தவத்தினால் தான் உலகமே வியக்கும் வண்ணம் வருகிற ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ள அயோத்தி ராமர் கோயில் எழுந்துள்ளது எனவும் மண்ணினால் கோயில் கட்டினால் 10 கோடி ஆண்டு கயிலாயத்தில் வாழலாம் செங்கல்லால் கோயில் கட்டினால் 100 கோடி ஆண்டு கயிலாயத்தில் வாழலாம் கருங்கல்லால் கோயில் கட்டினால் கயிலாயத்தை விட்டு அகலார் எனும் தனி பாடலுக்கு இணங்க கருங்கல்லால் கோயில் கட்டிய பாரதப் பிரதமர் இந்த கயிலாயத்தை விட்டு அகலார் எனவும் அவருக்கு ஞானசம்பந்தரின் திருவருள் கிடைக்க ஆசீர்வாதம் எனவும் கூறினார்.
செய்தியாளர் விக்னேஷ்.

No comments:
Post a Comment