பட்டுக்கோட்டையில் தாய் கல்வி மற்றும் சமூக நல கூட்டமைப்பு துவக்க விழா. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday, 9 October 2023

பட்டுக்கோட்டையில் தாய் கல்வி மற்றும் சமூக நல கூட்டமைப்பு துவக்க விழா.

.com/img/a/

photo_2023-10-09_16-33-02

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் கார்கா வயல், கூத்தாடி வயல் மற்றும் பண்ணவயல் கிராம கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால் தாய் கல்வி மற்றும் சமூக நல கூட்டமைப்பின் துவக்க விழா நடைப்பெற்றது. இதில் பட்டுக்கோட்டை வழக்கறிஞர் M. செல்வராஜ் அவர்களின் தலைமையிலும் அமைப்பின் ஆலோசகர் பொறியாளர் சிற்பி சேகர் அவர்களின் முன்னிலையிலும் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.


இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக அறம் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர்  பட்டுக்கோட்டை முகமது யஹ்யா, நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல சங்க மாவட்ட பொருளாளர்  C.K சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டு அமைப்பினை வாழ்த்தி சிறப்பு உரையாற்றினார்கள். முன்னதாக தாய் கல்வி மற்றும் சமூக நலக்கூட்டமைப்பின் தலைவர் முனைவர்  மா.பார்த்திபன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

photo_2023-10-09_16-33-05

இந்நிகழ்வில் அமைப்பின் சார்பாக ஏழை எளிய பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கல்வி பாட புத்தகங்கள் மற்றும் மிகவும் நலிவடைந்த ஆதரவற்ற கிராம மக்களுக்கு பொருளாதார உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் தாய் கல்வி மற்றும் சமூக நல கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் பயனாளிகள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவில் கலந்து கொள்ள முடியாத பயனாளிகளுக்கு அமைப்பின் பொறுப்பாளர்கள் அவர்களின் வீடு தேடி சென்று அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி சிறப்பித்தனர்.


கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் கார்கா வயல் கூத்தாடி வயல் மற்றும் ப ண்ணவயல் கிராம மக்களின் சமூக நலனை முன்னிட்டு அவர்களின் ஒற்றுமை ,கல்வி வளர்ச்சி, மற்றும் பொருளாதார முன்னேற்றம் இவற்றை லட்சியமாகக் கொண்டு


இவ்வமைப்பு செயல்படும் என்பதை‌ இக்கூட்டத்தில் அனைவரின் பேராதரவோடு ஏக மனதாக தீர்மானிக்கப்பட்டதுஇறுதியில் அமைப்பின் துணைத் தலைவர் முனைவர்  S. ராஜகோபால் அனைவருக்கும் நன்றி கூறினார். கூட்டம் இனிதே நிறைவுற்றது.


- செய்தியாளர் த.நீலகண்டன் பேராவூரணி 

No comments:

Post a Comment

Post Top Ad