மாற்றுத்திறனாளிகளை வஞ்சிக்கும் ஒன்றிய மோடி அரசைக் கண்டித்தும், 100 நாள் வேலைக்கான கூலியை மூன்று மாதமாக நிறுத்தி வைத்துள்ளதை கண்டித்தும், ஊதியத்துடன் தாமத இழப்பீட்டு தொகையை சேர்த்து வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில், மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் இரண்டாம்புலிக்காடு இந்தியன் வங்கி முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, மாற்றுத் திறனாளிகள் சங்க தஞ்சை மாவட்ட துணைத் தலைவர் ஏ.மேனகா தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நிர்வாகிகள் ஆர்.எஸ். வேலுச்சாமி, வீ.கருப்பையா, மாற்றுத்திறனாளிகள் சங்க ஒன்றியத் தலைவர் எஸ்.ஜே.ராஜேஷ் கண்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் த.நீலகண்டன் பேராவூரணி
No comments:
Post a Comment