இதில் மீனவர்களின் முக்கிய கோரிக்கையான தூண்டில் வளைவு துறைமுகம் அமைப்பது, மீன்பிடி தடைகால நிவாரணத் தொகை 5 ஆயிரத்திலிருந்து பத்தாயிரம் ஆக உயர்த்தி தருவது , கடற்கரையோர வாய்க்கால்களை தூர் வாருவது உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து மல்லிப்பட்டினத்தில் உள்ள பழமையான ராமர் கோயிலில் மத்திய அமைச்சர் மற்றும் இணை அமைச்சர் ஆகியோர் வழிபாடு செய்த பின் அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள மீனவர்களை சந்தித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பிஜேபி ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் மீனவர்களுக்காக 3000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில் பிரதமர் மோடி பதவி ஏற்றதற்கு பின் 36 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி மீனவர்கள் நலனில் பிரதமர் மோடி தனி அக்கறை காட்டி வருகின்றார் என்றார்.
செய்தியாளர் த.நீலகண்டன் பேராவூரணி
No comments:
Post a Comment