கோனேரிராஜபுரம் ஊராட்சியில் உள்ள கோயிலின் சிறப்பு அம்சங்களும், அக்ரஹாரம் பாரம்பரிய கட்டிடக்கலை பற்றியும் கோயம்புத்தூர், இந்துஸ்தான் ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் கட்டிடக்கலை மாணவர்கள் சார்பில் கும்பகோணம் கும்பேஸ்வரன் கோவில் அருகில் கிராமப்புற கட்டிடக்கலை வடிவமைப்பு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது அங்கு கட்டிடக்கலை மாணவர்கள் தங்கள் கிராமப்புற வடிவமைப்பு படைப்புகளை காட்சிப்படுத்தினர்.
மாணவர்கள் கோனேரிராஜபுரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளுக்கான ஆய்வு, ஆவணங்கள், புதுமை யோசனைகள் மற்றும் ஆக்கப்பூர்வமான தீர்வுகளை காட்சிப்படுத்தினர்., கும்பகோணம் கும்பேஸ்வரன் கோவில் விதீயில் மக்கள் அதிகமாக நடமாட்டம் இருக்கும் இடமான கண்காட்சி நடைபெற்றதால், பல பார்வையாளர்கள் பாதசாரிகள் தாள்களை ஆராய்வதற்கும், கோனேரிராஜபுரம் கிராமப்புற வடிவமைப்பு தீர்வுகளுடன் மாணவர்கள் மேற்கொண்ட ஆய்வு மற்றும் பகுப்பாய்வுகளைப் பற்றியும் படித்து வந்தனர்.
கண்காட்சியை கல்லூரி முதல்வர் சுரேஷ் பாஸ்கர் தலைமையில் மாநகர துணைமேயர் சு.ப தமிழழ்கன் முன்னிலையில் .பேராசிரியர் லட்சுமணன்ராஜு, லட்சுமணன், ராஜராஜேஸ்வரி, ஜானகி ஒவியகலைஞர் ராஜேஷ், திமுக தகவல் தொழில்நுட்பம் காளிதாஸ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .
.
No comments:
Post a Comment