இயற்கை விவசாயம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க இயற்கை முறை விவசாயிகளுக்கான போட்டி- சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார். - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday 6 October 2023

இயற்கை விவசாயம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க இயற்கை முறை விவசாயிகளுக்கான போட்டி- சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்.


தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் 'ழ' பவுண்டேஷன் மற்றும் வேளாண்மை துறை சார்பில் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் நெல் விவசாயிகளுக்கான போட்டியை சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்ய நாதன் துவக்கி வைத்தார் .இந்த நிகழ்வில் பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி எம்எல்ஏக்கள் அண்ணாதுரை மற்றும் அசோக்குமார் ஆகியோர் பங்கு பெற்றனர்.

இதில் அமைச்சர் மெய்யநாதன் பேசும்பொழுது சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுப்பதற்கு டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். நெல் விவசாயம் செய்வதால் கார்பன் டைஆக்சைடு உள்வாங்கப்பட்டு  தூய ஆக்சிஜனை வெளியிடுவதன் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்க நெல் விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது .அதனை கருத்தில் கொண்டு 'ழ' பவுண்டேஷன் அமைப்பினர் நெல் விவசாயத்தை ஊக்குவிக்கின்ற வகையில் நெல் விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளை உற்சாகப்படுத்த 90 நாட்களுக்குள் இயற்கை முறையில் விவசாயம் செய்து அதிகப்படியான மகசூலை பெறும் விவசாயிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கும் வகையில் இந்த  நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த 'ழ' பவுண்டேஷன் அமைப்பை சேர்ந்தவர்கள் அனைவரையும் பாராட்டுகிறேன் என்றார். 


இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை 'ழ' பவுண்டேஷன் நிறுவனர் கார்த்திக் அசோக்குமார் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


செய்தி: பேராவூரணி நீலகண்டன் 

No comments:

Post a Comment

Post Top Ad