தஞ்சாவூர் மாவட்டம் ,பேராவூரணி ஆதனூரில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மகாத்மா காந்தி இளைஞர் நற்பணி மன்ற தலைவர் முனைவர், வேத.குஞ்சருளன் தலைமை வகித்தார்.செய்தியாளர்கள் த.நீலகண்டன், த.திருஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக இயற்கை ஆர்வலர் சுந்தரம் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் வில்லியேசன், ரெத்தினம், டெனிசன்ராஜ் ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பேராவூரணி நீலகண்டன்
No comments:
Post a Comment