ஒட்டங்காடு தீ விபத்து மரச்சாமான்கள் எரிந்து நாசம். - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday, 12 October 2023

ஒட்டங்காடு தீ விபத்து மரச்சாமான்கள் எரிந்து நாசம்.

.com/img/a/

photo_2023-10-12_22-23-43

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள ஒட்டங்காடு கடைவீதியில், கணேசன் ஆசாரி என்பவர் மர சாமான்கள் தயாரித்து விற்பனை செய்யும் பட்டறை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு திடீரென மரப்பட்டறை தீப்பற்றி எரியத் தொடங்கியது. 

இது குறித்து தகவல் அறிந்து வந்த பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் அக்கம்பக்கம் பரவாமல் தீயை அணைத்தனர். ஆனாலும் மரப்பட்டறையில் இருந்த இயந்திரம் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் நாசமானது. 


தீ விபத்தில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லோடு வேன், அடுக்கி வைக்கப்பட்டிருந்த தேக்கு, பலா, பூவரசு உள்ளிட்ட பல வகை மரங்கள், அறுத்து வைக்கப்பட்டிருந்த பலகைகள், தயார் செய்து வைக்கப்பட்டிருந்த பீரோ, கட்டில், மேஜை உள்ளிட்ட சுமார் 8 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்து புகாரின் பேரில் திருச்சிற்றம்பலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. 


இந்நிலையில் தகவல் அறிந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏவும் விவசாய பிரிவு மாநில இணைச்செயலாளருமான மா.கோவிந்தராசு அறிவுறுத்தலின்படி, பேராவூரணி தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கோவி. இளங்கோ சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட கணேஷ் சந்தித்து ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார். 


- செய்தியாளர் த.நீலகண்டன் பேராவூரணி.

No comments:

Post a Comment

Post Top Ad