வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஆலோசனைக் கூட்டம். - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 14 October 2023

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஆலோசனைக் கூட்டம்.


தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் த.சுகுமார் தலைமையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மீட்பு நிவாரணப் பணிகள் மேற்கொள்ளுதல் தொடர்பாக, வட்ட அளவிலான அனைத்து துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. 

வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வேந்திரன், மண்டல துணை வட்டாட்சியர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், வட்ட வழங்கல் துறை, காவல் துறை, வட்டார வளர்ச்சி, வேளாண்மை துறை, சுகாதாரத்துறை, பேரூராட்சி, கல்வித்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர். 


இக்கூட்டத்தில், 'வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதால் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை உருவாக்கி, அதில் அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களுடன் சுழற்சி முறையில் பணியாளர்களை நியமித்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்' என அறிவுறுத்தப்பட்டது.


- செய்தியாளர் த.நீலகண்டன் பேராவூரணி 

No comments:

Post a Comment

Post Top Ad