டெல்டா பாசனத்திற்கு காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தண்ணீர் திறக்காத கர்நாடக அரசை கண்டித்தும், தண்ணீர் திறந்து விட கர்நாடகா அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ரயிலடி முன்பாக முன்னாள் எம்எல்ஏ சிங்காரம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.
ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் , மதிமுக, திக, விசிக, உள்ளிட்ட அனைத்து கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
- செய்தியாளர் த.நீலகண்டன்
No comments:
Post a Comment