தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் உலக இதய தின விழா கொண்டாட்டம். - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday, 28 September 2023

தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் உலக இதய தின விழா கொண்டாட்டம்.

.com/img/a/

.com/img/a/

தஞ்சாவூர் மாவட்டம் செப்டம்பர் 29 டெல்டா பகுதியில் ஒருங்கிணைந்த இருதய சிகிச்சைப் பிரிவுகளைக் கொண்ட முதல் மருத்துவமனையான  தஞ்சை. மீனாட்சி மருத்துவமனையின் உலக இதய தின விழா நாளை வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது.


இந்த புனித நாளில் நம் இதயங்களை கவனித்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை இந்த நாள் நமக்கு நினைவூட்டுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள் "ஒவ்வொரு இதயத்திற்கும் ஒரு இதயத்தைப் பயன்படுத்து" என்பதாகும்.


டெல்டா பகுதியில் உள்ள எங்கள் மீனாட்சி மருத்துவமனையின் அதிநவீன இருதய சிகிச்சை மையத்தில், உலகத்தரம் வாய்ந்த இருதய சிகிச்சைகளை மக்களின் நலனுக்காக கொண்டு வந்துள்ளோம். மருத்துவமனையில் இருதய மயக்கவியல், கார்டியோ தொராசிக் மற்றும் வாஸ்குலர் அறுவை சிகிச்சை, இண்டர்வென்ஷனல் கார்டியாலஜி, டிவைஸ் கிளினிக் மற்றும் குழந்தைகளுக்கான இருதயவியல் ஆகிய பிரிவுகளை உள்ளடக்கிய டெல்டா பகுதியின் முதல் மற்றும் விரிவான இருதய சிகிச்சை மையமாக நாங்கள் இருக்கிறோம்.


2023 ஆம் ஆண்டு உலக இதய தினத்தை முன்னிட்டு, தஞ்சை மீனாட்சி மருத்துவமனை, இதய ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உயிர்காக்கும் நுட்பங்களைப் பயிற்றுவிக்கவும், சிறப்பு முயற்சிகளை இந்த மாதம் முழுவதுமே மேற்கொண்டு வந்துள்ளது.


சமூக விழிப்புணர்வின் ஒரு பகுதியாக,  மீனாட்சி மருத்துவமனை, விரிவான முதலுதவி பயிற்சித் திட்டத்தை, தஞ்சை கல்லூரிகளில் உள்ள 500 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கற்று கொடுத்தது. கல்லூரி மாணவர்களை மையமாகக் கொண்ட இந்தத் திட்டம், உயிர்காக்கும் CPR பயிற்சிக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்து, அவசர காலங்களில் உடனடியாக செயல்பட இளைஞர்களுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது.


உலக இதய தினத்தை முன்னிட்டு, இதய தின விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக,  மீனாட்சி மருத்துவமனை, தன் வளாகம் முழுவதும் சிவப்பு விளக்குகளை ஒளிர விட்டுள்ளது. இந்த சிவப்பு நிறம், இதய அவசியத்தை வலியுறுத்துகிறது. இது ஆரோக்கியத்தை காப்பதன் அவசியத்தை மட்டுமின்றி இந்த மாதம் முழுவதுமே மருத்துவமனையில் இதய பிரச்சனைகளை கண்டறிவதற்கான சிறப்பு பரிசோதனைகள் செய்யப்பட்டு, இதயத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், இதயப் பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து இதயப் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான எங்களின் இந்த விழிப்புணர்வு முயற்சியானது, மக்களிடையே இதய ஆரோக்கியத்தை பற்றிய புரிதலை அதிகப்படுத்துவதற்காக செய்யப்படுகிறது.


மீனாட்சி மருத்துவமனை டெல்டா பகுதியில் இதய சிகிச்சையில் முன்னோடியாக விளங்குகிறது.. ஆஞ்சியோகிராம்கள், 4000 11000 க்கும் மேற்பட்ட கரோனரி க்கும் மேற்பட்ட வெற்றிகரமான ஆஞ்சியோபிளாஸ்டிகள் மற்றும் 2000 க்கும் மேற்பட்ட வெற்றிகரமான இதய அறுவை சிகிச்சைகள், 102 க்கும் மேற்பட்ட பேஸ்மேக்கர்கள் பொருத்துதல் ஆகியவற்றின் மூலம், மீனாட்சி மருத்துவமனை டெல்டா பகுதியின் இதய சிகிச்சையில் ஒரு முக்கிய அங்கமாக உருவெடுத்துள்ளது.


மருத்துவத் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும் அதிநவீன சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்தியதில்' எங்கள் மருத்துவமனை பெருமிதம் கொள்கிறது. இந்த நோயாளிகளுக்கு அதிநவீன வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த உயர் தர நடைமுறைகள் சிகிச்சைகளை வழங்க சிகிச்சைகளின் மூலம் நோயாளிகளின் வாழ்க்கை மேம்படுகிறது. அறுவைசிகிச்சை இல்லாமல் பெருநாடி வால்வை மாற்றுவதற்கான மேம்பட்ட செயல்முறையான TAVI (Transcatheter Aortic Valve Implantation) என்ற வெற்றிகரமான சிகிச்சை செய்யப்பட்டது. 'Orbital Atherectomy எனப்படும் ஒரு மேம்பட்ட கதீட்டர் தொழில்நுட்பத்தின் மூலம் 78 வயதான முதியவரின் அதிக கால்சியம் படிந்த கரோனரி தமனிகளுக்கான சிகிச்சை வழங்கப்பட்டது. 


வயதான 81 முதியவரின் இதய குழாய் அடைப்பை நீக்க வைரம் பதித்த கருவி மூலம் சிகிச்சை வழங்கப்பட்டது. டெல்டாபகுதியின் முதல் கார்டியாக் எலக்ட்ரோபிசியாலஜி & ஹார்ட் ஃபெயிலியர் கிளினிக் வசதியை மீனாட்சி மருத்துவமனை அறிமுகம் செய்துள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad