கும்பகோணத்தில் பருத்தி விவசாயிகள் சாலை மறியல். - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday 6 July 2023

கும்பகோணத்தில் பருத்தி விவசாயிகள் சாலை மறியல்.


கும்பகோணம் கொட்டையூர் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன்பு, ஏராளமான விவசாயிகள் பருத்திக்கு நியாயமான விலை வேண்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. பருத்திவிவசாயிகள்மறியல் போராட்டம் காரணமாக, கும்பகோணம் - சுவாமிமலை சாலையில் சுமார் அரை மணி நேரம் மேல்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் இதனால் பள்ளி கல்லூரி அலுவலகம் முடிந்து வீட்டுக்கு செல்வோர் பெரிதும் கஷ்டமடைந்தனர் சாலை மறியல்  தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு வந்த துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் கும்பகோணம் கிழக்கு காவல் ஆய்வாளர் அழகேசன் ஆகியோர் தலைமையிலான போலீசார்  விவசாயிகளை களைந்து போக கூறினர்.



அவர்கள் மறுக்கவே, காவல்துறையினருக்கும்விவசாயிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதமும், தள்ளு முள்ளும் ஏற்பட்டதால் போலீசார் அவர்கள் அனைவரையும் வலுக்கட்டாயமாக சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். உடனே போக்குவரத்து சரி செய்து வழக்கம் போல போக்குவரத்து செல்வதற்கு உடனே ஏற்பாடு செய்தனர்.


அதனைத் தொடர்ந்து சாலை மறியல் ஈடுபட்ட விவசாயிகளுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் இதனால் கும்பகோணம் சாமி மலை சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad